Saturday, September 6, 2008

ஒரிஸ்ஸாவில் சங்பரிவார் வெறியாட்டம் தமுமுக கடும் கண்டனம்

தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி பத்திரிக்கைகளுக்கு விடுத்திருக்கும் பத்திரிக்கை அறிக்கை


ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் சக்திகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள துமுடி பந்த்கா என்ற இடத்தில் சுவாமி லக்ஸ நந்த சரஸ்வதி உள்ளிட்ட ஐந்து பேர் படுகொலை செய்யப் பட்டது கண்டனத்திற்குரியது.


இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரிஸ்ஸா முழுவதும் வி.ஹெச்.பி தலைமையில் ஹிந்துத்வா சக்திகள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டம், நமக்கு குஜராத்தை நினைவூட்டுகிறது.


கடந்த 23.08.2008 தேதியிலிருந்தே தொடர்ச்சியாக வன்முறைகள் வெடித்துக் கொண்டிருப்பதும், அந்த வன்முறைகளால் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப் பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.


ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் கலவரத்தை அடக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நடத்தி வரும், மதவெறியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப் படவேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

No comments: